புதுமை வகுப்பறை ! ” ப ” வடிவத்திற்கு பதிலாக Chevron Style முறையை பயன்படுத்துக :
Tamilnadu

புதுமை வகுப்பறை ! ” ப ” வடிவத்திற்கு பதிலாக Chevron Style முறையை பயன்படுத்துக :

Jul 13, 2025

புதுமை வகுப்பறை ! ” ப ” வடிவத்திற்கு பதிலாக Chevron Style முறையை பயன்படுத்துக :


நோக்கம் மேலானதாக இருந்தாலும் உடல் உபாதைகளை முதன்மையாக கவனிக்க வேண்டும் !


மாணவர்களின் உயரத்தின் அடிப்படையில் தான் பள்ளிகளில் அமர வைக்கப்படுகின்றனர். அப்படி தான் backbench என்று பொதுவாக வருகிறது ! ஆனால் ஒரு பொது உரையாடலும் உண்டு back benchers என்றால் அவர்கள் படிக்க மாட்டார்கள், அரசியல்வாதிகள் ஆவதற்கு தான் லாயக்கு என்று ! இது ஒரு பார்ப்பனிய கருத்தாக்கம் !

பார்ப்பான் நோக்கில் இல்லாமல், noble cause என்ற முறையில்
தமிழக அரசு, “back benchers” என்பதை களைந்து, அனைத்து மாணவர்களும் ஆசிரியரின் நேரடி பார்வையில் இருப்பதற்காக வகுப்பறை இருக்கையை “ப” வடிவ seating முறையில் அமைக்கும் முயற்சியை தற்போது முன்னெடுத்து வருகிறது.

வகுப்பறையின் மூன்று பக்கங்களிலும் அமைக்கப்பட்டு, மாணவர்கள் எல்லோரும் முகமுகமாக அமர்ந்திருப்பார்கள். ஆசிரியர் நடுவே நின்று பாடம் நடத்துவார். இது, பார்ப்பதற்கு புதுமையாக இருந்தாலும், மருத்துவ ரீதியாக கவலையை ஏற்படுத்தும் ஒரு அம்சமாக உள்ளது.

சிறப்பு வகுப்பு, கலந்துரையாடல் போன்றவற்றிக்கு இந்த “ப” முறை சரி என்றாலும், முழு நேரமும் இதுவே என்றால் அது கடுமையான உடல் உபாதைகளுக்கு கொண்டு செல்லும் !

இந்த அமைப்பில், ஆசிரியருக்கு நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் சில மாணவர்களைத் தவிர, இடது பக்கம் மற்றும் வலது பக்கம் அமர்ந்திருக்கும் பெரும்பாலான மாணவர்கள் பாட நேரம் முழுவதும் (6–8 மணி நேரம்) கழுத்தை ஒரு பக்கம் திருப்பி வைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இதுவே சில முக்கியமான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். இதை பற்றி மருத்துவ துரை சார்ந்த அறிஞர்களிடம் கேட்டறிந்த பொழுது,

குறிப்பாக, ஒரே பக்கமாக கழுத்தை திருப்பி வைத்திருப்பதால், மாணவர்களுக்கு Cervical Strain, Upper Crossed Syndrome ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இது மட்டுமல்ல,stress Headaches, migrain pain, நெஞ்சு/மீன் எலும்பு வலி, தோள்பட்டை பிரச்சனை போன்றவையும் வரலாம்.

மேலும், சில மாணவர்கள் கண்ணாடி அணிவது, அல்லது ஆப்டிகல் லென்ஸ் அணின்திருப்பர். அவர்களுக்கு optical angle மாறுவதால் “intensified condition called Asthenopia” (கண் சோர்வு) வர வாய்ப்புண்டு. பக்கவாட்டில் இருந்து பல மணி நேரம் blackboard-ஐ கவனிப்பது, பார்வை மோசமாதல் (Worsening of refractive errors), இரட்டை பார்வை (Diplopia) போன்றவற்றையும் தூண்டும்.

இவ்வாறான பிரச்சனைகளுக்கு மாற்றாக உலகளவில் பரவலாக பின்பற்றப்படும் ஒரு seating model தான் “Chevron Style”. இது பின்வருமாறு அமையும்:

\ / \ / \ / \ /

இது, மாணவர்கள் ஒருவருக்கொருவர் சற்று திரும்பி அமர்ந்தாலும், முன்னே Blackboard-ஐ நேராக பார்க்கும் வசதி தருகிறது. கழுத்தை முழுமையாக சாய்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது பார்வை சோர்வையும், சர்வைக்கல் வலியும் குறைக்கும். கூடுதலாக, மாணவர்கள் ஒருவரையொருவர் பார்க்கக்கூடிய இடத்தில் இருப்பதால் உரையாடல் சார்ந்த கற்றல் (interactive learning) ஊக்கமளிக்கப்படுகிறது.

இந்த seating முறைகளுக்கு மேலாக, Flexible Classroom Design என்ற அமைப்பும் உலகளவில் பயன்படுத்தபடுகிறது.

So said ” back benchers” என்ற சொல்லாடல் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒரு noble idea தான் என்றாலும், அதில் உடல்நலச் சிக்கல்கள் உருவாவதை நாம் தவிர்க்க வேண்டிய கடமையில் இருக்கிறோம்.

மாற்று seating அமைப்புகள், மாணவர்களின் உடல் வளர்ச்சி, பார்வை திறன், கல்வி வளர்ச்சிக்கும், மாணவர் உடல் நலத்திற்கும் மாற்று வழி என்பதை தமிழக அரசு தங்கள் கருத்தில் கொண்டு இந்த ” ப” வடிவ அமர்வு திட்டத்தை கை விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் !

நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *