தாஹோட் ரயில்வே ஒப்பந்தம்: ‘Make in India’வா?

2025 மே 26-ஆம் தேதி, குஜராத்தின் தாஹோத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் மோடியின் முன்னிலையில் 9,000 ஹெச்பி திறன் கொண்ட இந்தியாவின் முதல் மின்சார ரயில் என்ஜினை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய வைஷ்ணவ், இந்த புதிய ரயிலின் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை விளக்கியதுடன், தாஹோட் வசதி முழுமையாக இந்தியரால் உருவாக்கப்பட்டதென வலியுறுத்தினார்.
ஆனால் உண்மையில், மீளுருவாக்க பிரேக் எனும் தொழில்நுட்பம் இந்திய ரயில்வேயில் 1990களிலேயே அறிமுகமாகியுள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தில் உள்ள சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் (CLW) இல் 2000களிலேயே இத்தகைய எஞ்சின்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே, புதியதாகக் கூறப்படும் இந்தத் தொழில்நுட்பம் தற்போதைய நிகழ்ச்சிக்கு முழுமையான புதுமையில்லை.
சீமென்ஸ் நிறுவனத்துடன் இந்திய ரயில்வே கையெழுத்திட்ட ரூ.26,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், டாஹோட் வசதியில் ரயில்கள் தயாரிக்கப்படும் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலவரப்படி, முக்கிய கூறுகள் மகாராஷ்டிராவின் நாசிக், அவுரங்காபாத், மும்பை ஆகிய நகரங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தாஹோட்டில் நடைபெறுவது இறுதி அசெம்பிளி, சோதனை மற்றும் இயக்குதலே என்பது அதிகாரபூர்வமான விளக்கம்.
இவ்வாறு LoA-வின் மூல நோக்கத்திலிருந்தும், தொழில்நுட்ப மாற்றத்திலிருந்தும் Significant deviation (முக்கிய மாறுபாடு) ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில்வே ஊழியர்களுக்கு அறிவு மாற்றம் (knowledge transfer) ஏற்பட வேண்டிய நிலையில், தற்போது அது நடைபெறுவது குறைவாக உள்ளது என்பது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்பு சீமென்ஸில் துணைத் தலைவராக இருந்தது ஒரு நலன் முரண்பாடா என்பதையும் தி வயர் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் அமைச்சகம் இது குறித்து நியாயமான முறையில் நடந்து கொண்டதாகவும், டெண்டர் முறைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.