உலகப்பெரும் அறிஞராகக் கருதப்படும் அமெரிக்க நாட்டை சார்ந்த நோம் சாம்ஸ்கி, 2023 ஆம் ஆண்டு அல் ஜசீரா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இன்றைய உலகத்தின் நிலைமையை பற்றிய தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தினார். “அனுபோர்” பற்றி அவர் எச்சரிக்கிறார்.
அணு விஞ்ஞானிகள் நிர்ணயிக்கும் ‘டூம்ஸ்டே கிளாக்’ (Doomsday Clock) தற்போது ‘மிட்நைட்டிற்குப்’ (அணுபோர் தொடங்க) 89 வினாடிகள் மட்டுமே தொலைவில் இருக்கிறது; இது வரலாற்றில் இது வரை இருந்த மிக அபாயகரமான நிலை என்றார் சாம்ஸ்கி.
உலகம் முழுவதும் உள்ள நிலைத்தன்மையற்ற அரசியல் சூழ்நிலை மற்றும் சுற்றுச்சூழல் அழிவு ஆகியவை இந்த அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளன.
பாலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சனை குறித்தும் அவர் வெளிப்படையாக விமர்சனங்களை பதிவு செய்தார். மேற்க்கு கரை மற்றும் காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் குடியேற்றம் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ‘ குடியேற்ற காலனியலாக்கம்’ (Settler Colonialism) என அவர் கண்டிக்கிறார்.
இதன் சில அம்சங்கள் தென் ஆப்ரிக்காவில் நிகழ்ந்திருந்த அப்பார்த்தெய்டை விட கடுமையானவை எனவும் அவர் சொல்கிறார். யூதர்களுக்கான கலாச்சார வட்டாரமாக இஸ்ரேல் இருக்கலாம் என்பதில் அவர் மதிப்பளிக்கிறார்; ஆனால் ஒரு மத அடிப்படையிலான தேசிய அடையாள அரசாக இருப்பது ஜனநாயக தத்துவத்திற்கும் சமத்துவத்திற்கும் முரணாகும் என அவர் குறிப்பிட்டார்.
தன் சொந்த அரசியல் வாழ்க்கையைப் பற்றியும் சாம்ஸ்கி விமர்சனமாகவே பேசினார். 1969ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் பாலஸ்தீனப் பெண்கள் மற்றும் மக்கள் மீதான அடக்குமுறைகளை விமர்சிக்கத் தொடங்கினேன்; ஆனால் அதற்கு முந்தைய காலத்தில் பேசாமல் இருந்தது ஒரு பெரிய ஒழுக்கப் பிழையாகவே எனக்குத் தோன்றுகிறது என அவர் நெருக்கமாகக் கூறினார்.
உலகம், அரசியல் மற்றும் சூழலியல் ரீதியாகப் பெரும் புயலின் விளிம்பில் நிற்கிறது என்பதை சாம்ஸ்கியின் வார்த்தைகள் நினைவூட்டுகின்றன. இவை நம் காலத்தின் மிக முக்கியமான எச்சரிக்கைகளாகும். மனிதகுலம் தனது எதிர்காலத்திற்காகப் போராட வேண்டிய அவசியம் இருப்பதற்கே உரிய நிலை இருக்குமா என்பது கேள்விக்குறியே.