இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வைமேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!  – திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
Politics

இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வைமேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!  – திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

Jun 1, 2025

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் பேருந்துகளில் மகளிர், மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், திருநர்கள்ஆகியோருக்கு கட்டணமில்லா விடியல் பயணம், 1.14 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர்உரிமைத் திட்டம், பெண்களுக்கு மானியத்துடன் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ, புதுமைப் பெண் திட்டம், அரசுப் பணிகளில் பணியாற்றும்பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு, பணியாற்றும் பெண்களுக்குத்தோழி விடுதி, வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் தங்கிட 17 சிப்காட் தொழிற்சாலைப் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம், சுயஉதவிக்குழு சகோதரிகள் தயாரிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லஇலவசப் பயணத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்தவர்களுக்குக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் பொருட்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி, மகளிருக்குஆவின் தயாரிப்புப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை, இ-சேவைமையங்களில் 10 விழுக்காடு சேவைக் கட்டணம், மற்றும் சமூகநீதித்திட்டங்கள் போன்ற எண்ணற்ற சமூக நலத்திட்டங்களைக் கொண்டு வந்துமகளிரின் வாழ்வை மேம்படுத்தி, இந்திய அளவிலான பெண்பணியாளர்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் 42% என்கிற சாதனையையும்படைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குஇப்பொதுக்குழு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.- திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *