RBI-ன் அதிரடி விதிகள்..பாதிக்கப்பட போகும் பாமர மக்கள் …ஏழை மக்கள் வாழ்வியலை சீர்குலைகிறதா? நிதித்துறை …
தலையங்கம்

RBI-ன் அதிரடி விதிகள்..பாதிக்கப்பட போகும் பாமர மக்கள் …ஏழை மக்கள் வாழ்வியலை சீர்குலைகிறதா? நிதித்துறை …

May 23, 2025

நகை கடன் குறித்து தற்போது ஆர்பிஐ 9 விதிகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இவ்விதிப்பு மக்களுக்கு சாதகமா? அல்லது பாதகமாக? என்கிற கருத்துக் கணிப்பில் பெரும்பாலும் பாதகமே என தெரிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

முதலில் இருந்த மாதிரி நகை கடனுக்கான வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு பிறகு அசலை எப்போது வேண்டுமானாலும் செலுத்தி நகையை பெற்றுக்கொள்ளலாம் ஆனால் தற்பொழுது அந்நிலை மாறி. . வட்டியுடன் சேர்ந்து அசலையும் அக்காலத்திற்குள் கட்டி முடித்து விட்ட பிறகு தான் மீண்டும் ஒருமுறை நகைகளை திருப்பி அடுகு வைக்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மேலும் அடுத்தடுத்த விதியாக.. அடமானம் வைக்கும் தங்கநகையின் மதிப்பில் 90 சதவீதம் வரை பணம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது ஆனால் தற்பொழுது வெறுமனே 75% மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர்.அதாவது ஒரு லட்ச ரூபாய் என்றால் அதில் 75 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்.

அடமானம் வைக்கும் தங்க நகை தங்களுடையது தான் என்கிற ஆதாரத்தை வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.அடமானம் வைக்கப்படும் தங்க நகை தரம் குறித்தான சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த சான்றிதழில் நகை சம்பந்தமான அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்க வேண்டும்.தனிநபர் ஒரு கிலோ தங்கம் அல்லது 50 கிராம் காசோ தான்அடமானம் வைக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

அடமானம் வைக்கப்படும் தங்க நகையானது 22 கேரட் தங்கம் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படும்.மேலும் இவ்விதிகளில் பாமர மக்களுக்கு சாதமாக அமையும் என்றால் இவ்விதியை கூறலாம், வாங்கிய தங்க நகை கடனின் வட்டியையும் அசலையும் முழுவதுமாக வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செலுத்தி விட்டால்…ஏழு நாட்களுக்குள் அப்பணத்தை வங்கி தரா விட்டால் ஒரு நாளைக்கு 5000 வீதம் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டும்.இப்படியாக புது விதிமுறைகளை RBI – அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனால் பணக்காரர்களோ ஊழல் செய்பவர்களோ பாதிக்கப்படுவதில்லை ஏழை மக்களும் குரு சிறு வியாபாரிகள் தான் பாதிக்கப்படுபவர்கள் ஆகையால் இவ்விதங்களை பரிசீலனை செய்யுமாறு பலராலும் கோரிக்கைகள் வைக்கின்றனர்.இந்த நிலையில் இவ் விதிகளை மாற்றப்படுமா? ஏழைகள் நலனின் ஒன்றிய அரசாங்கம் செயல்படுமா? என்பதே கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *