ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவின் வரி உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்நிலையில், இனி வரும் காலத்திலும் இதே போல வரி தொடர்ந்தால், நிச்சயம் உலக பொருளாதாரம் துண்டிக்கப்படும் என்று பிரிக்ஸ் அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையான பிரேசில் எச்சரித்துள்ளது. AD
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமை வகிக்கும். இந்த முறை பிரேசில் வகித்திருக்கிறது. இந்த ஆண்டு பிரேசிலில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு முன்னதாக நேற்று பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாவிலிருந்து வெளிவிவகார அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் செயலராக இருக்கும் டம்மு ரவி பங்கேற்றிருந்தார். இதில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வரி விவகாரம் தொடர்பாகவும், இதற்கு எதிராக எப்படி செயல்படுவது என்றும் பேசப்பட்டிருந்தது.
இக்கூட்டம் முடிந்த பின்னர் கூட்டு அறிக்கை ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. மாறாக பிரரேசில் மட்டும் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதில், “வரி அச்சுறுத்தல் காரணமாக உலக பொருளாதாரம் துண்டிக்கப்பட்டு பல பகுதிகளாக பிரிய வாய்ப்பு இருக்கிறது. பல துறைகள் இணைந்து செயல்படும் ‘மல்டிலாட்டரலிசம்’ எனும் நடைமுறை பலவீனப்பட்டு வருக்கிறது. இதுபற்றி பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். வரி அச்சுறுத்தல் இத்துடன் நின்றுவிடவில்லை. மாறாக உலக பொருளாதார மந்த நிலையையை ஏற்படுத்தவும் வழி வகுத்திருக்கிறது.
இந்த பிரச்சனைக்கு எதிராக தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியிருக்கின்றன. வரும் ஜூலை மாதம் நடைபெறம் பிரிக்ஸ் மாநாட்டில் இது தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியாகும்” என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்க விதித்த வரி காரணமாக உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. யேல் பல்கலைக்கழகம் இந்த வரி குறித்தும், வரியால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து அதை வெளியிட்டிருந்தது. அதன்படி, வரி காரணமாக விலைவாசி சராசரியாக 2.3% வரை உயர்ந்திருக்கிறது. எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு கூடுதலாக 3800 அமெரிக்க டலார் அளவுக்கு செலவு ஏற்படுகிறது என்று கூறியிருந்தது.
ஆடைகள் மற்றும் உணவு பொருட்களின் விலை 17% வரை உயர்ந்திருக்கிறது. மறுபும் வணிக நம்பிக்கையை இந்த வரி குறைத்திருக்கிறது. எனவே முதலீடுகள் குறைந்திருக்கின்றன. வேலைவாய்ப்புகளும் அடிவாங்கியிருக்கிறது. ஐஎம்எஃப் மற்றும் ஓஇசிடி போன்ற சர்வதேச அமைப்புகள் உலக வளர்ச்சி குறையும் என்பதை கணித்திருக்கின்றன. உலக வங்கும், சர்வதேச வளர்ச்சி 1.6% வரை குறையும் என்று கணித்திருக்கிறது. இவ்வளவுக்கும் காரணம் அமெரிக்காவின் வரிதான்.
இந்த வரியால் இந்தியாவும் கூட பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து இந்த வரிக்கு எதிராக செயல்பட வேண்டியது நம்முடைய கடமை என்று பலரும் கூறி வருகின்றனர்.