திமுக அமோக மெற்றி பெறும் – இந்தியா டுடே C Voter கருத்து கணிப்பு, மக்களின் கணிப்பும் அதுவே
Opinion

திமுக அமோக மெற்றி பெறும் – இந்தியா டுடே C Voter கருத்து கணிப்பு, மக்களின் கணிப்பும் அதுவே

Feb 13, 2025

இந்தியா டுடே C-Voter கருத்து கணிப்பு வெளியாகி பேசு பொருளாக உள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக, மக்களுக்கு பயன் தரும் வகையில் நடந்து வருவதை உறுதி செய்யும் விதமாக இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது.

2021 முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது, ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு சாதகமாக இல்லாத போதும் அதை சமாளித்து பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைய செய்தது, நிதி மேலாண்மை மேம்பட நிதி வல்லுநர்களை நியமிப்பது, அனைத்து தரப்பு மக்களும் பயனடைவது, தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியது, மாநில சுயாட்சி பாதுகாத்து மொழியின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இரும்பின் தொன்மை பற்றிய ஆராய்ச்சி பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் சான்றாக இந்திய டுடே C voter கருத்து கணிப்புகள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் படி ஆளும் திமுக அரசுக்கு 5% ஆதரவாக மக்கள் ஆதரவு கூடியுள்ளது. இதற்கு மேலே சொன்ன அனைத்தும் முழு முதற்காரணம். பொதுவாக ஆளுங்கட்சிக்கு எதிர் மனநிலையில் (anti incumbency) மக்கள் இருப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் இதற்கு நேரெதிராக ஆளும் கட்சிக்கு ஆதரவான மனநிலையில் (pro incumbency) மக்கள் இருப்பது அரிதிலும் அரிதான ஒன்று என்று அரசியல் வல்லுனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

எதிர்கட்சியான அதிமுக வின் வாக்குவங்கி 3% குறைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக விற்கு இது பேரதிர்ச்சியாக இருக்கும். மக்கள் நலனுக்காக, மாநில தேவைக்காக அதிமுக அரசியல் ரீதியாக இயங்கவில்லை என்பதை இந்த கருத்து கணிப்பு தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.

வெறும் கருத்து கணிப்பு என்றில்லாமல் அண்மையில் நடந்த ஈரோடு இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை சந்திக்கும் போது அவருக்கு மக்கள் தரும் பிரம்மாண்ட வரவேற்பு மக்கள் ஆதரவு ஆகியவற்றையும் நாம் இதோடு ஒப்பிட வேண்டும்.

இந்த நிமிடம் தேர்தல் நடந்தால் ஆளும் திமுக அரசு எளிதில் வெற்றி பெறும் என்றும், இந்திய கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாகவும் இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது.

மக்களின் நலனை காக்கும் அரசை மக்கள் கைவிடமாட்டர்கள் என்பதற்கு உதாரணமாக இந்த கருத்து கணிப்பு நமக்கு மீண்டும் உணர்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *