கலைஞரை சீமான் விமர்சிக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் ?? பதில் சொல்லுங்கள்
Opinion

கலைஞரை சீமான் விமர்சிக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் ?? பதில் சொல்லுங்கள்

Jan 28, 2025

ஈழத்தில் நடந்த இன அழிப்பை திமுக செய்த தவறாக தான் இன்றளவும் எல்லா தேர்தல் மேடைகளிலும் ஓர் அரசியல் பிரச்சாரமாக பயன்படுத்த படுகிறது. அரசியல் சாசன அமைப்பை, இந்திய அரசின் இராஜதந்திர நகர்வுகளை புரிந்தால் இப்படி பேச மாட்டோம்

திமுக மீது பழி போட்டு ஆதாயம் அடையும் யுத்தி அதிமுக வில் தொடங்கி நேற்று வந்த விஜய் வரையில் இதற்கு விதிவிலக்கல்ல. 2009 முதல் 2017 வரை பெரியாரிய இயக்கங்கள் இதை எதிர்த்து பேசினார்கள் என்று சொன்னால் நம்மால் நம்ப முடியவில்லை. அதன் விளைவு சீமான் 3 ஆவது கட்சி என்கிற அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபாகரன் மூலமாக பொது பிம்பம் ஆக்கப்பட்டார். இலவச ஜியோ சிம் வந்த பிறகு யூடியூப் மூலம் மெல்ல மெல்ல சீமான் அடுத்த தலைமுறை நபர்களின் நம்பிக்கையை சிறிது காலம் பெற்று வந்தார். அவர் வளர்ச்சியை கண்டு தான் அவரை முறியடிக்க சில பெரியாரிய இளைஞர்கள் தாமாக முன்வந்து எதிர் கருத்துக்களை செய்து இன்று சீமானை ஓரளவிற்கு தடுத்தும் விட்டார்கள்.

தமிழக மக்களின் நலனுக்காகவே உழைத்த கலைஞர் தான் இதில் உண்மையாகவே அதிகம் விமர்சிக்க பட்ட நபர். ஏதோ அறிவாலயத்தில் இருந்து தான் யேவுகணை தாக்குதல் நடந்தது போல அவ்வளவு கட்டுக்கதைகள் பரப்பபட்டிருக்கிறது. அதை திமுக மட்டும் தான் எதிர்வினை செய்ய வேண்டும் என்று சிலர் சொல்வது நமக்கு கேட்காமல் இல்லை. கலைஞர் யாருடைய ஆட்சியை இங்கே கடை பிடித்தார். பெரியார் பாதையில் தான் திமுக ஆட்சி இன்றளவும் பயணிக்கிறது. அதற்கு 1000 உதாரணம் நம் கண் முன்னே உள்ளது.

ஈழம் தேவை தான், ஆனால் அதைவிட முக்கியம் இங்கு 8 கோடி தமிழக மக்களின் நல்வாழ்வு, கல்வி, சுகாதாரம், எதிர்காலம். அதை உறுதி செய்து நம்மை காத்திட பெரியார் கருத்தியலில் அண்ணா பாதையில் ஆட்சி செய்த முத்துவேல் கருணாநிதி தான் நமக்கு என்றைக்கும் தலைவன். நம்மை வன்முறைக்கு போக விடாமல் அரசியல் ரீதியாக தீர்வுகளை காண பழக்கியவர் அருமை புரிய 2 நாள் ஈழத்தில் இருந்து பாருங்கள், புரியும் கலைஞர் யாரென்று

கலைஞர் பற்றி கணக்கில்லாத அளவிற்கு கட்டுக்கதைகளை அவதூறுகளை பேசிய சீமானை பார்த்து யாரும் இவ்வளவு தீர்க்கமாக மூர்க்கமாக எதிர்ப்பை பதிவு செய்யவில்லை.

அப்போதெல்லாம் சீமான் ஈழம் மற்றும் பிரபாகரன் பற்றி இங்கு எல்லோரிடமும் கொண்டு சேர்க்க தேவைப்படுகிறார் என்கிற அளவில் திராவிட கருத்தியல் சார்ந்த நபர்கள் அமைதி காத்து அவரை வளர்த்து விட்டனர்.
சீமான் இன்று பெரியாரை பேசிய உடன் வரிசை கட்டிக்கொண்டு உலகின் பல்வேறு திசைகளில் இருந்து வாக்குமூலம் தருகிறார்கள். இவர்கள் மீது தோழமை கோவம் எனக்கு எப்போதும் உண்டு. ஏன் இந்த தாமதம் ?? கலைஞரை சீமான் விமர்சிக்கும் போது நீங்கள் எங்கே போனீர்கள் ?? பதில் சொல்லுங்கள்

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *