
“ஆரியன் ரவி நாடக சீமான்” இருக்கும்வரை திமுக வை யாராலும் வெல்ல முடியாது – பெயரை கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலின்.
எதிரிகளுக்கு வயிறு எரியும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் இன்று 3000 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் முதல்வர் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். அங்கு பேசிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை ஒருமுறை கூட சொல்லவில்லை, ஆளுநர் RN பெயரை பலமுறை நேரடியாக சொல்லி கடுமையான விமர்சனங்களை வைத்தார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ஒரு கோரிக்கையும் வைத்தார். ஆளுநரை மாற்ற வேண்டாம் என்றும் நக்கலாக ஆளுநரை துவைத்து எடுத்தார்.

சமீப காலமாக சீமான் பெரியாரை பற்றி அவதூறாக பேசி வருவதை அவர் கட்சி உறுப்பினர்களே விரும்பவில்லை. இது குறித்து அவர்கள் அதிருப்தியை நேரடியாக சீமானிடம் பலமுறை சொல்லியும் அதை பொருட்படுத்தாத சீமான் மீண்டும் மீண்டும் பெரியார் குறித்து பேசி சொந்த கட்சி நபர்களே வெறுக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டார். தொண்டர்கள் மட்டுமல்லாது முக்கிய பொறுப்பில் இருந்த நபர்களும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுக வில் இணைந்தனர். அப்படி இணைந்த நபர்களின் விவரங்கள் பின்வருமாறு

மண்டல செயலாளர் – 1
மாவட்ட செயலாளர்கள் – 8
ஒன்றிய செயலாளர்கள் – 5
சார்பு அணி நிர்வாகிகள் – 9 தொகுதி செயலாளர்கள் – 6
முன்னாள் எம் பி வேட்பாளர்கள் – 3
முன்னாள் எம் எல் ஏ வேட்பாளர்கள் – 6

12 மாவட்டங்களில் இருந்து உறுப்பினர்கள் இணைந்திருப்பதால் மேலும் சிலர் வந்து இணைய இருப்பதால் 6 லட்சம் வாக்குகள் நாதக இழக்க நேரிடும் என்று திமுக மாணவரணி பொறுப்பாளர் மற்றும் முன்னாள் நாதக உறுப்பினரான ராஜிவ் காந்தி தெரிவித்தார்
இந்த கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக வில் மட்டும் தான் ஆட்சி முடியும் நேரத்தில் புதிய உறுப்பினர்கள் வந்து சேரும் காட்சிகள் சாத்தியம். மற்ற கட்சிகளில் ஆட்சி முடியும் போது எதிர்க்கட்சிகளுக்கு புதிய உறுப்பினர்கள் வருவார்கள், ஆனால் இங்கு தலைகீழாக எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளுங்கட்சிக்கு வந்து இணைவது திமுக மீண்டும் ஆட்சி அமைப்பதை தான் காட்டுகிறது. இதை பார்த்து எதிரிகள் வயிறு எரியத்தான் செய்வார்கள் என்றும் பேசி உற்சாக படுத்தினார்
பெரியார் பற்றி அதிகம் அவதூறு பேச பேச அழிவு நிச்சயம் என்பதை சீமான் போன்ற முட்டாள் மடையர்கள் உணராமல் தேய்ந்து போவது காலத்தின் கட்டாயம்
முதல்வர் சொன்னது போல ஆரியன் ரவி மற்றும் நாடக சீமான் இருக்கும்வரை திமுக விற்கு வெற்றி நிச்சயம்