பாஜகவிடம் பணிந்த எடப்பாடி , பாஜக கூட்டணிக்கு தயாராகும் அதிமுக
Politics

பாஜகவிடம் பணிந்த எடப்பாடி , பாஜக கூட்டணிக்கு தயாராகும் அதிமுக

Jan 9, 2025
  • “பாஜக கூட்டணி அழுத்தம்: அதிமுகவின் முடிவுகள் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?”

பாஜக வோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவோடு நெருங்கி போவதை உறுதி செய்வதாகவே உள்ளது என அரசியல் ஆர்வளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும், தொடர்நது பாஜக கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். ஏறகனவே பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் இடங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை ரைடு நடத்தி இருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக தொழில் அதிபர் ஈரோடு ராமலிங்கதின் இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. பழனிசாமியின் மகனது சகளையின் தந்தை தான் இந்த ராமலிங்கம். ராமலிங்கமும் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தி சுப்ரமணியனும் தொழில் பாட்னராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ராமலிங்கத்திற்கும் சொந்தகமான கட்டுமான நிறுவனத்தின் பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல ஆவணங்களை எடுத்து சென்றுள்ளது.

ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தான் கடந்த அதிமுக ஆட்சியில் 4000 கோடிக்கு அதிகமான டெண்டரை எடுத்திருந்தது. எடப்பாடி பழினிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பொருளாதார உதவியை செய்தவர்களுள் ராமலிங்கமும் முக்கியமானவர் என கூறப்படுகிறது. அப்படி எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமாக இருப்பவர் இடத்திலேயே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது நேரடியாக பழனிசாமிக்கு பாஜக கொடுத்த எச்சரிக்கையாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

இது பற்றி ஒரு அதிமுக ஆதரவு ஊடகவியாளர் கூறுகையில் “பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தான் ஆளுநருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி நடந்து வருகிறார். ஆளுநரை வேந்தர் பதவியில் இருந்தே அகற்ற வேண்டும் என்றவர் ஜெயலலிதா, ஆனால் இன்று துணை வேந்தர் நியமனத்தில் தலையீடு, மாநில நிர்வாகத்தில் இடையூறு செய்துவரும் ஆளுநர் ரவிக்கு ஆதரவாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவது முரணாக இருக்கிறது. அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் ஆளுநர் மற்றும் திமுக இரண்டு தரப்பையும் கடுமையாக தாக்கி போராட்டம் செய்திருக்க வேண்டும் ஆனால் அண்ணா பல்கலை துணைவேந்தரையே நியமிக்க விடாமல் நிர்வாகசீர்கேட்டுக்கு காரணமான ஆளுநரை காப்பற்றும் விதமாக நடந்து கொண்டு, வெறும் திமுக வை மட்டும் எதிர்க்கிறோம் என்றால் மக்கள் நம்புவார்களா. ? தனக்கு அரசியல் செய்ய கிடைத்த வாய்ப்பை எல்லாம் பாஜக விற்கு பயந்து கொண்டு வீணடித்து வருகிறார் பழனிசாமி. தற்போது பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தே ஆகிய வேண்டும் என பாஜக கொடுக்கும் அழுத்தத்தை தாங்க முடியாமல் பாஜகவோடு கூட்டணி வைக்க தயாராகி விட்டார் பழனிசாமி. இது நிச்சயம் அதிமுக வை மேலும் பலவீனப்படுத்துமே தவிர எந்த விதத்திலும் அதிமுக வளர்ச்சிக்கு உதவாது. தன்னை காப்பாற்றி கொள்ள அதிமுக வை பலி கொடுக்க முடிவு செய்துவிட்டார் பழனிசாமி” என்றார் வருத்தத்துடன்.

டங்கஸ்டன் விவகாரத்தில் பாஜக அரசை விமர்சிக்காதது , பல்கலைக் கழக துணை வேந்தர்களை நியமிக்கு உரிமையை ஆளுநருக்கே வழங்கும் UGC முடிவை எடப்பாடி பழனிசாமி எதிர்க்காதது , தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விவகாரத்தில் ஆளுநரை கண்டிக்காதது என பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுவருவது அதிமுக வினரையே அதிருப்தியில் தள்ளி உள்ளது. யார் அந்த சார் என்ற போராட்டத்தை முன்னெடுத்த அதிமுகவிற்கு பின்னடைவாக அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக வட்டச்செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் போராட்டத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது. இந்த சூழலில் உயர் நீதிமன்றமே கண்டித்த பின்னும் மீண்டும் மீண்டும் யார் அந்த சார் என்றே அதிமுக பேசி கொண்டிருப்பது , ஆளுநருக்கும் பாஜக அரசுக்கும் எதிராக மக்கள் கோபம் திரும்பி இருப்பதை மடைமற்றவே அதிமுக இவ்வாறு நடந்து வருகிறது என்ற கருத்தும் எழுந்து வருகிறது. அதிமுகவின் சமீபத்திய செயல்பாடுகளும் அதை ஆமோதிப்பதாகவே உள்ளது.

தன்னை வலுவான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ள அவ்வளவு வாய்ப்பு இருந்தும் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து அதை செய்யாமல் தற்போது பாஜகவோடு கூட்டணி வைக்க ஆயத்தமாகி வரும் எடப்பாடி பழனிசாமியின் முடிவை அதிமுக வின் தொண்டர்களே ஏற்பார்களா என தெரியவில்லை.

வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை கூட பாஜக விற்கு விட்டுக் கொடுத்துவிடலாம் என்ற முடிவில் பழனிசாமி இருக்கிறாராம். இது பற்றி அதிமுக வத்தார்த்தில் விசாரிக்கும் போது ” நீங்கள் சொல்வது உண்மை தான் 11 ஆம் தேதி நடக்கும் மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்று அறிவிப்பு வரும். கடந்த விக்காரவாண்டி தேர்தலிலேயே அதிமுக பின் வங்கி பாஜக கூட்டணிக்கு விட்டுக் கொடுத்தது எங்களுக்கே பிடிக்கவில்லை, நாம் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அதை பாஜக விற்கு விட்டுக் கொடுப்பது நியாயமா..? மக்கள் நம்மை மதிப்பார்களா.? இப்போது ஈரோடு கிழக்கிலும் பாஜகவிற்கு விட்டுக் கொடுத்தால் நாம் அரசியலில் இருந்தே விலகி கொள்ளலாம். . ஆனால் நாம் என்ன செய்ய முடியும்” என வீரக்தியோடு பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *