அதானி விவகாரம்: `எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை’ – வெளியுறவுத்துறை கூறுவதென்ன?
அமெரிக்க நீதிமன்றம் அதானி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்த நிலையில், இது தொடர்பாக இந்திய அரசுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை தனியார் மற்றும் சட்ட முறைசார்ந்த விவகாரமாகவே பார்க்கிறோம் என்றும், அமெரிக்காவுடன் இது தொடர்பான உரையாடல் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கைது வாரன்ட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது இந்திய அரசுக்கு ஒப்படைப்பு கோரிக்கை இல்லை. ஒப்படைப்பு கோரிக்கை வந்தால், அதனை இரு நாடுகளின் ஒப்படைப்பு ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் இந்திய நீதிமன்றம் ஆராயும். இது அரசியல் நோக்கமோ, மனிதாபிமானத்திற்கு எதிரானதாகவோ இருப்பின், அதற்கு எதிராக தீர்ப்பு வழங்க வாய்ப்பு உள்ளது.
அதானி ரூ.2000 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், லஞ்சம் பெற்ற நபர்கள் குறித்து விவரங்கள் இல்லை. அதானி இந்த குற்றச்சாட்டுகளை தவறானவை என மறுத்துள்ளார். வழக்கின் விசாரணை நீண்ட காலமாக செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
