“அனைத்து மாநிலங்களையும் காஷ்மீராக மாற்றத் துடிக்கிறது பாஜக!” – ராகுல் காந்தி மக்களவையில் அதிரடி முழக்கம்.
National

“அனைத்து மாநிலங்களையும் காஷ்மீராக மாற்றத் துடிக்கிறது பாஜக!” – ராகுல் காந்தி மக்களவையில் அதிரடி முழக்கம்.

Apr 17, 2026

புது தில்லி | ஏப்ரல் 17, 2026

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசின் இரட்டை வேடத்தைப் புள்ளிவிவரங்களுடன் தோலுரித்துக் காட்டினார்.

1. இந்த நிமிடமே அமல்படுத்துங்கள்!

“மகளிர் இடஒதுக்கீடு மீது உங்களுக்கு நிஜமான அக்கறை இருந்தால், அதை இந்த நிமிடமே (Right Now) அமல்படுத்துங்கள்; அதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கத் தயார். ஆனால், அதற்குத் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பதன் மூலம், பெண்களுக்கான உரிமையை இன்னும் பல ஆண்டுகள் தள்ளிப்போடவே அரசு நினைக்கிறது.”

2. ஓபிசி (OBC) பிரிவினருக்கு அநீதி:

“இந்த மசோதாவில் ஓபிசி பிரிவினருக்கான முறையான பங்கீடு இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் தர இந்த அரசு விரும்பவில்லை. சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் வழங்கப்படும் எந்த இடஒதுக்கீடும் அவர்களுக்கு முழுமையான நீதியைப் பெற்றுத் தராது.”

3. மகளிர் இடஒதுக்கீடு ஒரு ‘மறைப்பு’:

“மகளிர் இடஒதுக்கீடு என்பது ஒரு அழகான பெயர்ப்பலகை மட்டுமே. அதன் பின்னால் தொகுதி மறுவரையறை என்ற ஆபத்தான திட்டம் ஒளிந்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களின் எல்லையை மாற்றி, கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்க பாஜக திட்டமிடுகிறது.”

4. ஜம்மு-காஷ்மீர் மாடல் எச்சரிக்கை:

“ஜம்மு-காஷ்மீரின் அதிகாரங்களைப் பறித்து, அதை யூனியன் பிரதேசமாக மாற்றியதைப் போல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் வலுவிழக்கச் செய்ய பாஜக முயற்சிக்கிறது. மாநிலங்களின் குரலை ஒடுக்கி, டெல்லியில் இருந்து மட்டுமே அதிகாரத்தைச் செலுத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *