விஜய்யின் அதிரடி தேர்தல் அறிக்கை: 200 யூனிட் இலவச மின்சாரம் & ஒரு பவுன் தங்கம் – தவெக-வின் முக்கிய வாக்குறுதிகள்!
சென்னை | ஏப்ரல் 16, 2026
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில், விவசாயி நாராயணனிடம் தனது தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை வழங்கி விஜய் உரையாற்றினார். “ஸ்டாலின் சார் போல நாங்கள் பொய் சொல்ல மாட்டோம்” எனத் தனது உரையில் திமுக-வை நேரடியாகத் தாக்கிய விஜய், மக்களைக் கவரும் பல அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ளார்.
தவெக தேர்தல் அறிக்கையின் டாப் 10 வாக்குறுதிகள்:
- இலவச மின்சாரம்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம்.
- தங்கத் தாலி: ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் (ஒரு பவுன்) தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும்.
- வெற்றி மகளிர் திட்டம்: 60 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ₹2,500 உதவித்தொகை.
- கல்வி நிதி: 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க, தாயாருக்கு ஆண்டுக்கு ₹15,000 உதவித்தொகை.
- உயர் கல்வி கடன்: PhD வரை படிக்கும் மாணவர்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையில்லா கடன்.
- வேலையில்லா பட்டதாரிகள்: 29 வயதுக்கு மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000, பிளஸ் டூ முடித்தவர்களுக்கு ₹2,500.
- விவசாயக் கடன் தள்ளுபடி: 5 ஏக்கருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி.
- எரிவாயு சிலிண்டர்: ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்.
- மருத்துவக் காப்பீடு: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹25 லட்சம் மதிப்புள்ள மெகா ஹெல்த் இன்சூரன்ஸ்.
- வேளாண் விளைபொருட்கள்: நெல்லுக்கு குவிண்டாலுக்கு ₹3,500, கரும்புக்கு டன்னுக்கு ₹4,500 குறைந்தபட்ச ஆதரவு விலை.
விஜய்யின் அரசியல் விமர்சனம்:
“இரு கட்சிகளும் (திமுக, அதிமுக) ஒரே தேர்தல் அறிக்கையைத் தான் பெயர் மாற்றி, கலர் மாற்றித் தருகிறார்கள். நாங்கள் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்லியுள்ளோம். திருக்குறளின் அறம், பொருள், இன்பமே எங்கள் வழி.”

