5ஆம் நூற்றாண்டு திராவிட சங்கம் காஞ்சிபுரத்தில் :

ஜைன (சமண) காஞ்சி என்பது காஞ்சிபுரத்தில் இருக்கும் திருப்பருத்திக்குன்றம் பகுதியாகும். இங்கு கடைசி ஜைன தீர்த்தங்கரரான மகாவீரருக்கும், எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரநாதருக்கும் ஆலயங்கள் உள்ளன. இங்கு சமயம், கல்வி, சமுதாயம் சார்ந்து பெரும் தொண்டுகள் நடந்தன. அக்கால பள்ளிகளாக அது விளங்கியுள்ளது.
இவற்றை விட மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் 5 பொ.ஊ. (CE) இல் ” திராவிட சங்கம் ” நிறுவப்பட்டுள்ளது.
திராவிடம், திராவிட சங்கம் போன்றவை எல்லாம் ஏதோ கால்டுவெல் வந்த பிறகுதான் உருவானது என்று கூறும் மடமை கூட்டங்களுக்கு இதுவும் ஒரு ஆதாரமே.
நான் நிற்க கூடிய அந்த மரத்திற்கு கீழே தான் அப்பொழுது திராவிட சங்கம் நடைபெற்றதாக தலபுராண ஐதீகம். அதாவது அந்த மரம் அழிய அழிய புதியதாக மரம் தோன்றி அது பெரியதாக மாறுமாம்.
அதைப்போலவே திராவிடம் என்ற கோட்பாடு காலத்திற்கு ஏற்ப பரிணாமம் அடைய வேண்டும் !

நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்
காஞ்சிபுரம் #ஜைன #சமண #jainism #தமிழ் #திராவிட #திராவிடசங்கம்
