ராகுல் காந்தி பிரிட்டன் சிட்டிசனா? – தீவிரமாக ஆராயும் மத்திய உள்துறை!
கர்நாடக பாஜக நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர், ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அவரின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், ரகசிய மின்னஞ்சல்கள் உள்ளிட்ட ஆவணங்களை முன்வைத்து, ராகுல் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி. பாண்டே, “இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது” என்று கூறினர். இதையடுத்து, நீதிபதிகள் உள்துறை அமைச்சகம் உரிய பதிலை வழங்க வேண்டும் என அறிவித்துத், வழக்கை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
விசாரணை குறித்து விக்னேஷ் ஷிஷிர், “அடுத்த விசாரணைக்குள் அரசு முடிவை அறிவிக்க வேண்டும். ராகுலின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினார். பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்தி, “நீதிமன்றங்களில் உண்மை நிரூபிக்கப்பட வேண்டும்; சூழ்ச்சி செய்ய தேவையில்லை” என்றார்.
