ராகுல் காந்தியின் போராட்டம் வெற்றி பெற்றது – தேர்தல் ஆணையம் சிசிடிவி கண்காணிப்பு திட்டத்துக்கு ஒப்புதல்!

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த ராகுல் காந்தி அவர்கள், மிக முக்கியமான ஒரு வெற்றியை இன்று பெற்றுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, தேர்தல் ஆணையத்திடம் ஐந்து முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்த ராகுல் காந்தி, “காலை முதல் தேர்தல் முடியும் வரை அனைத்து பூத்களிலும் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஆனால், தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் இதற்கு தெளிவான பதிலை அளிக்காமல் தவிர்த்து வந்தது. தற்போதாவது வேறு வழியின்றி, தேர்தல் ஆணையம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அனைத்து வாக்குப் பாக்களிலும் (polling booths) சிசிடிவி கண்காணிப்பு அம்சத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ராகுல் காந்தி மேலும் வலியுறுத்தியதாவது:
“மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், 5 மணிக்கு பிறகு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சந்தேகங்கள் எழுந்தன. இவற்றின் சிசிடிவி காட்சிகளை வெளியிடுமாறு கேட்டோம். அதற்குப் பதிலாக மௌனம் தவிர எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.”
இதற்கு பதிலளிக்க தவறிய தேர்தல் ஆணையம் தற்போது நாடு முழுவதும் சிசிடிவி கண்காணிப்பை உறுதி செய்யும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்த மாற்றத்திற்கு பின், பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பீகாரில் நடந்த தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், “மன்னிக்கவும்” என்ற பதில்கள் வந்த சூழ்நிலையில், இந்த நடவடிக்கை தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்தும் ஒரு முக்கிய அடியாகக் கருதப்படுகிறது.
“நீதி வெல்லும். மக்கள் விருப்பமே இறுதி தீர்ப்பு. ஜனநாயகம் பாதுகாக்கப்படும்!” – ராகுல் காந்தி
இது ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இப்போதும் தேர்தல் முறையில் நம்பிக்கையை பெற அரசு இயந்திரங்கள் உறுதி செய்ய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.