Opinion

கருஞ்சட்டை காதலும்காதலித்த மனைவியும்:-

Oct 19, 2025

கருஞ்சட்டை காதலும்
காதலித்த மனைவியும்:-(1)
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
அன்பார்ந்த தோழர்களே, மக்கள் பணி என்பது முக்கியம் தான், தன் கொள்கை எவ்வளவு முக்கியமோ அது போல தனது குடும்பமும் முக்கியமானது.இன்று கருஞ்சட்டை அணியும் தோழர்கள் பலர் தனது குடும்பத்துடனும் மனைவியுடனும் நேரத்தை செலவழிப்பது இல்லை.

காதலித்து திருமணம் செய்து தங்களை நம்பி வந்த மனைவியை கோபுரத்தின் உச்சியில் வைத்து கொண்டாடாவிட்டாலும் அவ்வப்போது சிறிய மகிழ்ச்சியை கொடுங்கள்.எங்கோ ஒரு மாவட்டத்தில் உள்ள மக்களின் மனநிலையையும் உணர்வையும் புரிந்து கொண்டு குரல் கொடுக்கும்
நீங்கள் தன் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக வாழும் மனைவியின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.மணிக்கணக்கில் அரசியல் பேசுங்கள் பக்கம் பக்கமாக கருத்துக்களை எழுதுங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தன் மனைவியை சாப்பிட்டியா‌..? என்று கேளுங்கள்.ஒரு வாரத்திற்கு ஒருமுறையாவது ஒன்றாக அமைந்தது சாப்பிடுங்கள் , மாதத்திற்கு ஒரு முறையாவது அவளின் வரவு செலவுகளை கேளுங்கள், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது வெளியே அழைத்துச் செல்லுங்கள், வருடத்திற்கு ஒருமுறையாவது புடவை வாங்கி கொடுங்கள் ..
கோடி கோடியாக வாங்கி தரும் நகைகள் சொத்துக்களை விட நீங்கள் உங்களது மனைவியின் நெற்றியில் அன்போடுயிடும் முத்தம் அவர்களுக்கு விலையுயர்ந்தது.

வெளியில் சிரித்த முகத்துடன்
பல மனைவிகள் ஏக்கமாய் வாழ்கிறார்கள். உங்களிடம் வெளிப்படுத்துவது இல்லை ஆனால் உங்கள் அன்புக்கு ஏங்குகிறார்கள். மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் பெரியார் அது உங்களது மனைவியையும் சேர்த்து தான்.

பெண்ணுரிமையை பேசும் நீங்கள் சில நேரங்களில் தன் மனைவியும் பெண் தான் என்பதை மறந்து விடுகிறீர்கள்.


அவளுக்கு பல நாள்
நிறைவேறாத ஆசை
இன்று நிறைவேறியது..!
கணவன் வாங்கி
வந்த ஒரு புடவையால்..!

  • தமிழன். சு.கவின் குமார்
    தலைமை நிலைய செயலாளர்
    தோழர் களம்

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *