
உழவர்கள் – நெசவாளர்கள் – மீனவர்கள் எனஅனைத்துத் தரப்பினரின் வாழ்விலும்புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின்சாதனைகளைப் பரப்புவோம்!

கடந்தநான்காண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து, உழவர்களின் நலனைப் பாதுகாத்திருக்கிறது திராவிட மாடல் அரசு. இந்த ஆண்டும், வருகின்றஜூன் 12-ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறந்து வைக்கவுள்ளார்மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
இதுவரையில் வேளாண்மைக்கெனத் தனியாக 5 நிதிநிலை அறிக்கைகள்சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நெல் – கரும்பு – பருத்தி – எண்ணெய் வித்துகள் – பயறு வகைகள் உள்ளிட்ட அனைத்து வகைதானியங்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள்சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் வேளாண்மைக்கு ஆதாரமானநீர் மேலாண்மையில் கவனம் செலுத்தி, நவீன கருவிகள் வழங்கப்பட்டு, பணப் பயிர் வேளாண்மை, இயற்கை வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்புஎன அனைத்தையும் மேம்படுத்தி சிறந்த உழவர்களுக்கு விருதுகளும்வழங்கப்பட்டு வருகின்றன.
உழவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து நலன் காக்கும் திராவிடமாடல் அரசு நெசவாளர்களின் வாழ்விலும் வெளிச்சம் பரவும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு, கரூர், விருதுநகர், மதுரை, தஞ்சாவூர் ஆகியபகுதிகளில் கைத்தறி – விசைத்தறி மேம்பாட்டிற்காகப் பல்வேறுதிட்டங்களைச் செயல்படுத்தியிருப்பதுடன், இளைய தலைமுறையினரைக்கைத்தறித் தொழிலில் தொழில் முனைவோராக்கும் வகையில் 10 சிறியகைத்தறிப் பூங்காக்கள் அமைத்திடவும், கோ-ஆப்டெக்ஸ் மூலமாகநெசவாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், விசைத்தறி உற்பத்தித்திறனை அதிகரிக்க மின்னணுப் பலகைகள் நிறுவ மானியம் வழங்கியும், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தியும், பட்டு நெசவு உற்பத்திக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தியும்மனிதர்களின் மானம் காக்கும் நெசவாளர்கள் தங்கள் வாழ்வை சிறப்பாகஅமைத்துக் கொள்ளும் வகையில் பல சாதனைத் திட்டங்கள்செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல், தமிழ்நாடு மீனவர் நலவாரியம் வாயிலாக 19,997 பயனாளிகளுக்குப் பல்வேறு நிவாரணம் மற்றும் உதவித்தொகைதிட்டங்களின்கீழ் ரூ.25.68 கோடியை வழங்கியதுடன், கடந்தநான்காண்டுகளில் 121 மீன்வள உட்கட்டமைப்புப் பணிகளுக்காக மொத்தம்ரூ.1,849 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி பணிகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில்நடைபெற்ற மீனவ மக்களுக்கான சிறப்பு மாநாட்டில் கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு, 1,000 கோடிரூபாய்க்கும் அதிக மதிப்பிலான மீனவர் நலத்திட்டங்களை அறிவித்துஅவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். இப்படி, ஒவ்வொருசமுதாயத்துக்கும் பார்த்து பார்த்து திட்டங்களைச் செயல்படுத்துகிறமாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் சாதனைகளைமக்களிடம் கொண்டு சேர்க்கப் பரப்புரை செய்வோம்! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம்