கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா: ஓர் அரசின் துல்லியமான முன்னெடுப்பு!
Tamilnadu

கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா: ஓர் அரசின் துல்லியமான முன்னெடுப்பு!

Sep 26, 2025

இனியன், விழியன், மகாலட்சுமி, அகரம் போன்ற தனிநபர்கள் செய்த நற்செயல்களைத்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசும் முன்னெடுத்திருக்கிறது. ஆனால், ஓர் அரசே முழுமையாக இறங்கி, அதைத் துல்லியமாகவும், முழுமையான கண்காணிப்புடனும் செயல்படுத்தும்போது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்முன் காட்டிய விழாவாக நேற்றைய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா’ அமைந்தது.

அகரத்தின் விதை, அரசின் ஆலமரம் !

அகரம் இன்று ஆலமரமாகச் செழித்து அதன் விழுதுகளே தனி மரங்களாகப் போனாலும், அந்த வித்து சிவகுமார் போட்டதுதான். எனவேதான், அவருக்கு முன்வரிசையில் அழைப்பு கொடுக்கப்பட்டது. விழா தொடங்குவதற்கு முன்னரே வந்தவர், நிறைவுவரை அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்தார்.

இந்தத் திட்டம் ‘என் மூளையில் உதித்தது’ என்று ஸ்டாலின் அரசு எங்கேயும் எதிலும் தன்னைப் முன்னிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, “இந்த விழா மிகச் சிறப்பாக நடக்க வேண்டும். பயனடைந்த மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு என்ன பேச ஆசைப்படுகிறார்களோ அதை முழுமையாகப் பேச விடுங்கள். நான் நிகழ்ச்சி முழுமைக்கும் இருப்பேன்,” என்று விழாவின் முன்னேற்பாடுகளின்போதே முதலமைச்சர் பெருமுனைப்போடு இருந்திருக்கிறார்.

அதனால்தான், முதலமைச்சர், துணை முதலமைச்சர் வருவதற்கு முன்பே விழா தொடங்கிவிட்டது. அரசுப்பள்ளி மாணவர்களில் பலர் புகழ்பெற்ற டிவி ஷோக்களில் பாடும் பாடகர்களாக உள்ளனர்.

உலகத் தரமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

விழாவின் மையமாக அமைந்தது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தில் பயனடைந்தவர்கள் மற்றும் அதன் செயலாக்கத்திற்கு உறுதுணையாய் இருப்பவர்கள் முதலில் வந்தனர்.

அந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்று பார்த்தபோது சிலிர்த்துப்போனது.

  • ராயபுரம் மண்டலத்திலிருந்து மட்டும் தினமும் 1000 குழந்தைகளுக்குக் காலை உணவு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அத்தனை துல்லியம்!
  • முதலமைச்சர்தான் தலைமை. அவருக்குக் கீழ் கல்வி அமைச்சர், செயலர், உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு அடுக்குகளில் கண்காணிப்புக் குழு உள்ளது.
  • உணவின் தரம் மற்றும் ருசிக்கான சோதனையை ஒரு பெரிய அதிகாரி செய்து, அதை மேலிடங்களுக்குத் தெரிவித்த பின்னரே அது விநியோகிக்கப்படுகிறது.
  • அதற்கான வேலை முன்னதிகாலை 4 மணிக்கே துவங்கிவிடுகிறது. ஆறு – ஆறரைக்குள் உணவு தயாராகி ‘ஹாட்பேக்’களில் வைக்கப்படுகிறது.
  • சோதனை முறைகள் முடிந்ததும், சரியாக 7 மணிக்கு வாகனங்களில் ஏற்றப்படுகிறது.
  • 8 மணிக்குள் அத்தனை வாகனங்களும் பள்ளிகளுக்குள் உணவை இறக்கி வைத்துவிடுகின்றன.
  • இடையில் யாரும் உணவைப் பார்க்கவோ, தொடவோ, மாற்றவோ, கெடுக்கவோ முடியாதபடி, சீல் வைக்கப்பட்டு, முழுமையான கண்காணிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • சரியாக 8:15 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர, அவர்களுக்குச் சுடச்சுடக் காலை உணவு வழங்கப்படுகிறது.
  • மாணவர்களுக்கு முன் அதைப் பரிமாறுபவரும், பொறுப்பாசிரியரும் சுவை பார்க்க வேண்டும்.
  • அதை வீடியோ காட்சிகளாகப் பதிந்து வாட்ஸ்அப் குழுக்களில் ஏற்ற வேண்டும். இதைத்தான் முதலமைச்சர் வரை கண்காணிக்கிறார்கள்.

இப்படி, இந்தத் திட்டம் ஒரு முழுமையானச் செயல்பாட்டுடன், உலகத்தரமான திட்டமாகச் செம்மையாகச் செயல்படுத்தப்படுகிறது.

சமூகத்தில் இதன் தாக்கம்

37,000க்கும் மேலான பள்ளிகளுக்கு அனுப்பப்படும் இந்தக் காலை உணவு, 20 இலட்சத்திற்கும் மேலான மாணவர்களுக்குத் தினமும் வழங்கப்படுகிறது. இது ஒரு மாபெரும் முயற்சி!

பழைய நினைவுகள் பலருக்கும் உண்டு. பாரதி பாஸ்கரின் தந்தை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர் தினமும் காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது நான்கு ‘டிபன் கேரியர்களை’ உடன் எடுத்துச் செல்வாராம். காரணம் கேட்டால், “பிரேயரில் எப்படியும் நாலு பசங்களாவது மயங்கி விழுவாங்க. வெறும் வயித்துல வருவாங்க. அதுக்காகத்தான்,” என்று சொல்வாராம்.

டாக்டர் அருண்குமார் விளக்கியது மிக முக்கியமானது: “பெரியவர்கள் பசியில் இருந்தால் உடல் கொழுப்பைக் கரைத்துப் சமாளிக்கும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படியில்லை. முறையான காலை உணவு இல்லாவிட்டால், மயக்கம், கல்வித்திறன் குறைபாடு, உடல் வலிமையின்மை, இரத்தசோகை எனப் பல பிரச்சினைகள் உருவாகும். இந்தத் திட்டத்தால் மூளையால் மட்டுமல்ல, உடலாலும் வலுவான மாணவர்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உருவாகும்.

இயக்குநர் மாரி செல்வராஜ், “பசிதான் திருட்டைத் தூண்டும். அந்தப் பசியைப் போக்கிவிட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சமூகமும் ஆரோக்கியமாக இயங்கும்,” என்று கூறினார்.

கல்வியின் முக்கியத்துவம்!

மாணவர் தமிழரசன் (‘லப்பர் பந்து’ புகழ்) பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

“இளையராஜா படிக்கல, ரஹ்மான் படிக்கலைன்னு சொல்வாங்க. அவர்களெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகளை என்றுமே சான்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது. விதிவிலக்குகளைத் தாண்டி, கல்வியால் சாதித்தவர்களின் எண்ணிக்கைதான் மிக மிக அதிகம். அதனால்தான் முதலமைச்சர், ‘படிங்க! படிங்க! படிங்க!’ என்று சொல்கிறார். நான் இன்னொருமுறை அதைச் சேர்த்து சொல்கிறேன், படிங்க! படிங்க! படிங்க! படிங்க!

இந்தத் திட்டத்தை பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களுக்குப் பரவச் செய்தவர் ஸ்டாலின். அவரது அடுத்த இலக்கு, இந்தத் திட்டத்தை உலகமயமாக்கிவிடுவார் என்று தோன்றுகிறது. ஒருவேளை, அடுத்தமுறை இந்த விழாவுக்கு இலங்கை, பர்மா, ஆப்பிரிக்க நாட்டு அதிபர்களை விருந்தினர்களாக அவர் அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தனக்கான பெயரை மட்டும் தக்க வைத்துக்கொள்ளும் குறுகிய எண்ணம் 1% கூட அவரிடம் இல்லை என்பதையே இச்செயல்கள் உணர்த்துகின்றன.

இந்தச் சிறப்பான விழாவைக் காண அழைப்பிதழ் தந்து அழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா: ஓர் அரசின் துல்லியமான முன்னெடுப்பு!

இனியன், விழியன், மகாலட்சுமி, அகரம் போன்ற தனிநபர்கள் செய்த நற்செயல்களைத்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசும் முன்னெடுத்திருக்கிறது. ஆனால், ஓர் அரசே முழுமையாக இறங்கி, அதைத் துல்லியமாகவும், முழுமையான கண்காணிப்புடனும் செயல்படுத்தும்போது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்முன் காட்டிய விழாவாக நேற்றைய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா’ அமைந்தது.

அகரத்தின் விதை, அரசின் ஆலமரம்

அகரம் இன்று ஆலமரமாகச் செழித்து அதன் விழுதுகளே தனி மரங்களாகப் போனாலும், அந்த வித்து சிவகுமார் போட்டதுதான். எனவேதான், அவருக்கு முன்வரிசையில் அழைப்பு கொடுக்கப்பட்டது. விழா தொடங்குவதற்கு முன்னரே வந்தவர், நிறைவுவரை அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்தார்.

இந்தத் திட்டம் ‘என் மூளையில் உதித்தது’ என்று ஸ்டாலின் அரசு எங்கேயும் எதிலும் தன்னைப் முன்னிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, “இந்த விழா மிகச் சிறப்பாக நடக்க வேண்டும். பயனடைந்த மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு என்ன பேச ஆசைப்படுகிறார்களோ அதை முழுமையாகப் பேச விடுங்கள். நான் நிகழ்ச்சி முழுமைக்கும் இருப்பேன்,” என்று விழாவின் முன்னேற்பாடுகளின்போதே முதலமைச்சர் பெருமுனைப்போடு இருந்திருக்கிறார்.

அதனால்தான், முதலமைச்சர், துணை முதலமைச்சர் வருவதற்கு முன்பே விழா தொடங்கிவிட்டது. அரசுப்பள்ளி மாணவர்களில் பலர் புகழ்பெற்ற டிவி ஷோக்களில் பாடும் பாடகர்களாக உள்ளனர்.

உலகத் தரமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

விழாவின் மையமாக அமைந்தது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தில் பயனடைந்தவர்கள் மற்றும் அதன் செயலாக்கத்திற்கு உறுதுணையாய் இருப்பவர்கள் முதலில் வந்தனர்.

அந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்று பார்த்தபோது சிலிர்த்துப்போனது.

ராயபுரம் மண்டலத்திலிருந்து மட்டும் தினமும் 1000 குழந்தைகளுக்குக் காலை உணவு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அத்தனை துல்லியம்!

முதலமைச்சர்தான் தலைமை. அவருக்குக் கீழ் கல்வி அமைச்சர், செயலர், உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு அடுக்குகளில் கண்காணிப்புக் குழு உள்ளது.

உணவின் தரம் மற்றும் ருசிக்கான சோதனையை ஒரு பெரிய அதிகாரி செய்து, அதை மேலிடங்களுக்குத் தெரிவித்த பின்னரே அது விநியோகிக்கப்படுகிறது.

அதற்கான வேலை முன்னதிகாலை 4 மணிக்கே துவங்கிவிடுகிறது. ஆறு – ஆறரைக்குள் உணவு தயாராகி ‘ஹாட்பேக்’களில் வைக்கப்படுகிறது.

சோதனை முறைகள் முடிந்ததும், சரியாக 7 மணிக்கு வாகனங்களில் ஏற்றப்படுகிறது.

8 மணிக்குள் அத்தனை வாகனங்களும் பள்ளிகளுக்குள் உணவை இறக்கி வைத்துவிடுகின்றன.

இடையில் யாரும் உணவைப் பார்க்கவோ, தொடவோ, மாற்றவோ, கெடுக்கவோ முடியாதபடி, சீல் வைக்கப்பட்டு, முழுமையான கண்காணிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சரியாக 8:15 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர, அவர்களுக்குச் சுடச்சுடக் காலை உணவு வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு முன் அதைப் பரிமாறுபவரும், பொறுப்பாசிரியரும் சுவை பார்க்க வேண்டும்.

அதை வீடியோ காட்சிகளாகப் பதிந்து வாட்ஸ்அப் குழுக்களில் ஏற்ற வேண்டும். இதைத்தான் முதலமைச்சர் வரை கண்காணிக்கிறார்கள்.

இப்படி, இந்தத் திட்டம் ஒரு முழுமையானச் செயல்பாட்டுடன், உலகத்தரமான திட்டமாகச் செம்மையாகச் செயல்படுத்தப்படுகிறது.

சமூகத்தில் இதன் தாக்கம்

37,000க்கும் மேலான பள்ளிகளுக்கு அனுப்பப்படும் இந்தக் காலை உணவு, 20 இலட்சத்திற்கும் மேலான மாணவர்களுக்குத் தினமும் வழங்கப்படுகிறது. இது ஒரு மாபெரும் முயற்சி!

பழைய நினைவுகள் பலருக்கும் உண்டு. பாரதி பாஸ்கரின் தந்தை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர் தினமும் காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது நான்கு ‘டிபன் கேரியர்களை’ உடன் எடுத்துச் செல்வாராம். காரணம் கேட்டால், “பிரேயரில் எப்படியும் நாலு பசங்களாவது மயங்கி விழுவாங்க. வெறும் வயித்துல வருவாங்க. அதுக்காகத்தான்,” என்று சொல்வாராம்.

டாக்டர் அருண்குமார் விளக்கியது மிக முக்கியமானது: “பெரியவர்கள் பசியில் இருந்தால் உடல் கொழுப்பைக் கரைத்துப் சமாளிக்கும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படியில்லை. முறையான காலை உணவு இல்லாவிட்டால், மயக்கம், கல்வித்திறன் குறைபாடு, உடல் வலிமையின்மை, இரத்தசோகை எனப் பல பிரச்சினைகள் உருவாகும். இந்தத் திட்டத்தால் மூளையால் மட்டுமல்ல, உடலாலும் வலுவான மாணவர்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உருவாகும்.”

இயக்குநர் மாரி செல்வராஜ், “பசிதான் திருட்டைத் தூண்டும். அந்தப் பசியைப் போக்கிவிட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சமூகமும் ஆரோக்கியமாக இயங்கும்,” என்று கூறினார்.

கல்வியின் முக்கியத்துவம்!

மாணவர் தமிழரசன் (‘லப்பர் பந்து’ புகழ்) பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

“இளையராஜா படிக்கல, ரஹ்மான் படிக்கலைன்னு சொல்வாங்க. அவர்களெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகளை என்றுமே சான்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது. விதிவிலக்குகளைத் தாண்டி, கல்வியால் சாதித்தவர்களின் எண்ணிக்கைதான் மிக மிக அதிகம். அதனால்தான் முதலமைச்சர், ‘படிங்க! படிங்க! படிங்க!’ என்று சொல்கிறார். நான் இன்னொருமுறை அதைச் சேர்த்து சொல்கிறேன், படிங்க! படிங்க! படிங்க! படிங்க!”

இந்தத் திட்டத்தை பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களுக்குப் பரவச் செய்தவர் ஸ்டாலின். அவரது அடுத்த இலக்கு, இந்தத் திட்டத்தை உலகமயமாக்கிவிடுவார் என்று தோன்றுகிறது. ஒருவேளை, அடுத்தமுறை இந்த விழாவுக்கு இலங்கை, பர்மா, ஆப்பிரிக்க நாட்டு அதிபர்களை விருந்தினர்களாக அவர் அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தனக்கான பெயரை மட்டும் தக்க வைத்துக்கொள்ளும் குறுகிய எண்ணம் 1% கூட அவரிடம் இல்லை என்பதையே இச்செயல்கள் உணர்த்துகின்றன.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *