“ஈழத்திற்கு புறப்படும் முன் கருணாநிதிக்கு கடிதம் கொடுத்தேன்…” – வைகோ பகிர்வு!
சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகள் ஒரு வருடத்துக்கு தனது வீட்டில் தங்கியிருந்ததை, தாயார் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்ததை, மற்றும் பிரபாகரனை சந்திக்க ஈழம் சென்ற அனுபவத்தை குறிப்பிட்டார். பிரபாகரன் தனது பாதுகாப்புக்காக 57 போராளிகளை அனுப்பியதை வைகோ நினைவுகூறினார். ஈழம் செல்லும் முன் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார் என்றும் தெரிவித்தார்.
பிரபாகரனை சந்திக்க சென்றதற்கு தி.மு.க-வுடன் தொடர்பு இல்லை என வெளியான அறிக்கையால் பிரபாகரன் தன்னை தமிழகத்துக்கு திருப்ப அனுப்பியதையும், அவர் தந்துள்ள சைனிட் குப்பியை பற்றியும் வைகோ விவரித்தார். தி.மு.க-வின் தலைவராக இருந்து, 27 முறை சிறைக்கு சென்றபோதும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தன் அனுபவத்தை பகிர்ந்தார்.
தொண்டர்களுக்கு உரையாற்றிய வைகோ, “ஒவ்வொரு நாளும் நபர்களை கட்சியில் இணைக்கும் முயற்சியிலும், அமைப்பை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்திலும் ஈடுபடுங்கள். அதனால் மட்டுமே நமக்கான நாள் வரும்” என அறிவுறுத்தினார்.
